RECENT NEWS

ஜன.14 அன்று நடைபெறவுள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்
மம்தா மைக் ஆப் செய்யப்படவில்லை - நிதி ஆயோக் சிஇஓ விளக்கம்

மம்தா மைக் ஆப் செய்யப்படவில்லை - நிதி ஆயோக் சிஇஓ விளக்கம்

Jul 28, 2024

560

நிதி ஆயோக் கூட்டத்தில் தனது மைக் அணைக்கப்பட்டதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியது தவறு என நிதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி சுப்ரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மம்தாவின் மைக் அட்ஜஸ்ட் செய்யப்பட்டதை அவர் தவறாகப் புரிந்துக் கொண்டதாகத் தெரிவித்தார்.ஒவ்வொரு முதலமைச்சருக்கும் 7 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டதாகவும், நேரம் முடிவடையும் போது மேஜையில் இருந்த திரையில் ஒளிபரப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மம்தா புறப்பட்டுச் சென்ற பிறகும் மேற்கு வங்க தலைமைச் செயலாளர் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றதாகவும் சுப்ரமணியம் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்.. 2047க்குள் 30 டிரில்லியன் பொருளாதார நாடாக உருவாக்குவது குறித்து ஆலோசனை

பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்.. 2047க்குள் 30 டிரில்லியன் பொருளாதார நாடாக உருவாக்குவது குறித்து ஆலோசனை

Jul 27, 2024

351

பிரதமர் மோடி தலைமையில் 9வது நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. பாஜக அரசு மத்தியில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைத்தபின் நடைபெற இருக்கும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இதுவாகும்.நாடு சுதந்திரம்பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை 30 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் பொருளாதாரம் கொண்ட நாடாக உருவாக்குவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்படுள்ளதாக கூறி, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தென்மாநிலங்களுக்கு முக்கிய பங்கு - நிதி ஆயோக் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் பேச்சு

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தென்மாநிலங்களுக்கு முக்கிய பங்கு - நிதி ஆயோக் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் பேச்சு

Jun 10, 2023

1388

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தென்மாநிலங்கள் முக்கிய பங்கு வகிப்பதாகநிதி ஆயோக் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்தார். சென்னையில் இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர், சுகாதாரம், கல்வி, சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் தென் மாநிலங்கள் எப்போதும் 'நம்பர் ஒன்' இடத்தில் இருப்பதாக கூறினார்.7 சதவீதமாக இருந்து வரும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்தது 10 சதவீதமாக உயர வேண்டும் என்றும், இதன் விளைவாக தனிநபர் வருமானம் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கு தென் மாநிலங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

மக்களின் குரலை எதிரொலிக்க 8 முதலமைச்சர்களும் தவறி விட்டதாக பாஜக விமர்சனம்..!

மக்களின் குரலை எதிரொலிக்க 8 முதலமைச்சர்களும் தவறி விட்டதாக பாஜக விமர்சனம்..!

May 27, 2023

3616

நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின் முக்கிய கூட்டத்தில் கலந்து கொண்டு, மக்களின் குரலை எதிரொலிக்க 8 மாநிலங்களின் முதலமைச்சர்களும் தவறி விட்டதாக பாஜக விமர்சித்துள்ளது.நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் டெல்லி, கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப், தெலுங்கானா, மேற்குவங்கம்,பிகார், ஓடிசா ஆகிய 8 மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர்.இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், நாட்டின் வளர்ச்சி மற்றும் திட்டமிடலுக்கு நிதி ஆயோக் முக்கியமானது என்றும், இன்றைய கூட்டத்தில் 100 விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு தீர்வு காணப்படவுள்ளதென்றும் குறிப்பிட்டார்.8 முதலமைச்சர்கள் புறக்கணித்தது, அவர்கள் தங்கள் மாநில வளர்ச்சியை புறக்கணித்ததற்கு சமம் என்றும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். ஜப்பான் பயணம் சென்றுள்ளதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது பற்றி பிரதமர் தலைமையில் ஆலோசனை

2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது பற்றி பிரதமர் தலைமையில் ஆலோசனை

May 27, 2023

1527

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 8ஆவது நிதி அயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.2047ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது தொடர்பாக ஆலோசிக்க நடந்த கூட்டத்தில் உத்தர பிரதேசம், ஆந்திரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களும், மத்திய அமைச்சர்களும் பங்கேற்றனர்.அதில், உட்கட்டமைப்பு, முதலீடுகள், சுகாதாரம், திறன் மேம்பாடு உள்ளிட்டவை தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், நாட்டின் வளர்ச்சியை அடுத்த 25 ஆண்டுகளுக்கு வேகப்படுத்துவது குறித்தும், அதற்கான வழிமுறைகளைத் திட்டமிடுவது பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஆதார் மூலம் 2 இலட்சம் கோடி ரூபாய் சேமிப்பு - நிதி ஆயோக் அதிகாரி

ஆதார் மூலம் 2 இலட்சம் கோடி ரூபாய் சேமிப்பு - நிதி ஆயோக் அதிகாரி

Jun 02, 2022

2813

அரசின் நலத் திட்டங்களுக்கு அடித்தளமாக ஆதார் உள்ளதாகவும், இதன்மூலம் இரண்டு இலட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.ஆதார் அடிப்படையில் நலத்திட்டங்களை வழங்குவதால் போலிகள், இரட்டைப் பதிவுகள் ஒழிக்கப்பட்டதாகவும், அரசின் பணப்பயன்கள் விரைவாகவும் இடைத்தரகர்கள் இன்றியும் நேரடியாகப் பயனாளிகளின் கணக்கில் சேர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மின் வாகனங்களுக்கான பேட்டரி செல்கள் இந்திய சூழல்களுக்கு ஏற்றதாக இருக்காது -நிதி அயோக் உறுப்பினர் தகவல்

மின் வாகனங்களுக்கான பேட்டரி செல்கள் இந்திய சூழல்களுக்கு ஏற்றதாக இருக்காது -நிதி அயோக் உறுப்பினர் தகவல்

May 10, 2022

2867

நாட்டில் பல இடங்களில் மின் வாகனங்கள் தீவிபத்திற்குள்ளான நிலையில், அந்த வாகனங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் பேட்டரி செல்கள் இந்திய சூழல்களுக்கு ஏற்றதாக இருக்காது என நிதி அயோக் உறுப்பினரும் விஞ்ஞானியுமான சரஸ்வத் தெரிவித்துள்ளார்.இது குறித்து பேசிய அவர், பேட்டரி தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதாகவும், தற்போதைய சூழலில் இந்தியா பேட்டரி செல்களை தயாரிக்கவில்லை என்றும் கூறினார்.மேலும், இந்தியாவில் அதற்கான உற்பத்தி ஆலைகளை விரைவில் அமைக்க வேண்டும் என்றும், அதில் தயாரிக்கப்படும் பேட்டரி செல்கள், அதிக வெப்பநிலை உள்ள இந்திய நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சரஸ்வத் குறிப்பிட்டுள்ளார். 

வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழ்நாடு முதலிடம் - நிதி ஆயோக்

வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழ்நாடு முதலிடம் - நிதி ஆயோக்

Feb 11, 2022

1824

வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாக நிதி ஆயோக் அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டின் சாதனைக்கு மாவட்ட அளவில் சிறந்த வளர்ச்சி நிர்வாகத்தைக் கொண்டு இருப்பது காரணமாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், இலவச அரிசி திட்டம், மாற்றுத் திறனாளிகள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்புக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதும் வறுமை ஒழிப்பிற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10சதவீதமாக இருக்கும் - நிதி ஆயோக் துணைத்தலைவர்

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10சதவீதமாக இருக்கும் - நிதி ஆயோக் துணைத்தலைவர்

Nov 03, 2021

9476

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதமாக இருக்கும் என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்தார். டெல்லியில் பேசிய அவர், பிரதமர் மோடி அரசாங்கத்தின் ஏழாண்டு காலத்தில் இந்தியாவில் தொழில்கள் செழித்து வளர வலுவான பொருளாதார அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.கொரோனா பேரிடர் காரணமாக இரண்டு ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியில் தடுமாற்றம் இருந்த தாகவும் தெரிவித்தார். 

கொரோனா 2-வது அலையால் வேளாண் துறையில் பாதிப்பு இல்லை - நிதி ஆயோக் தகவல்

கொரோனா 2-வது அலையால் வேளாண் துறையில் பாதிப்பு இல்லை - நிதி ஆயோக் தகவல்

Jun 06, 2021

3615

கொரோனா 2-வது அலையால் வேளாண் துறையில் எந்தவித பாதிப்பு இல்லை என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.இது குறித்து நிதி ஆயோக்கின் உறுப்பினர் ரமேஷ் சந்த், செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில் கிராமப்புறங்களில் பெரும்பாலும் மே மாதத்தில் தான் அதிகளவில் கொரோனா தொற்று பரவியதாகவும், கோடை வெயில் காரணமாக மே மாதத்தில் வழக்கமாகவே விவசாய நடவடிக்கைகள் குறைவாகவே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.இதனால், கொரோனாவின் 2-வது அலையால் வேளாண் துறை பாதிக்கப்பட வாய்ப்பில்லை எனவும் அவர் கூறியுள்ளார். பருப்பு வகை உற்பத்தியில் இந்தியா ஏன் தன்னிறைவு பெறவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தியாவின் மானியம், விலை மற்றும் தொழில்நுட்பக் கொள்கைகள் அரிசி, கோதுமை கரும்பு ஆகியவற்றுக்கே சாதகமாக இருப்பதாக கூறினார்.

கொரோனாவின் 3வது அலை வருகிற செப்டம்பரில் தாக்கும்: நிதி ஆயோக் உறுப்பினர்  எச்சரிக்கை

கொரோனாவின் 3வது அலை வருகிற செப்டம்பரில் தாக்கும்: நிதி ஆயோக் உறுப்பினர் எச்சரிக்கை

Jun 05, 2021

6380

கொரோனா 3-வது அலை வருகிற செப்டம்பர் மாதம் தாக்கும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.டெல்லியில் பேசிய அவர், கொரோனாவின் 2வது அலையை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள், ஆக்சிஜன் வங்கிகள் உருவாக்கல், ஆக்சிஜன் வினியோகத்துக்கு தொழில்துறையின் உதவிகள் போன்றவற்றால் சிறப்பாக நிர்வகித்திருக்கிறோம் என்றார்.  இதன் காரணமாக புதிய தொற்று எண்ணிக்கை சரிந்து வருவதாக கூறிய அவர்,  இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலையும் தவிர்க்க முடியாது என நிபுணர்கள் மிகவும் தெளிவாக கூறியிருக்கிறார்கள் என்றார்.இந்த அலை செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தொடங்கும் என்று கூறப்படுவதால் இதை எதிர்கொள்வதற்காக அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

இதுவரை பெரிய அளவில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை  -நிதி ஆயோக் உறுப்பினர்

இதுவரை பெரிய அளவில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை -நிதி ஆயோக் உறுப்பினர்

Jun 02, 2021

3559

கொரோனா தொற்று குழந்தைகளிடம் தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும், இருப்பினும், அது உருமாற்றம் அடைய நேர்ந்தால் குழந்தைகளையும் பாதிக்கக் கூடும் என்று நிதி ஆயோக் உறுப்பினரான டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளுக்குப் பரவக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் நமது கவனம் முழுவதும் குழந்தைகளுக்குப் பரவக் கூடிய கோவிட் 19 நோய்த் தொற்றின் மீது தான் இருக்கிறது என்று வி.கே.பால் தெரிவித்தார். தற்போதைய சூழலில் அறிகுறியற்ற நிலையே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.குழந்தைகளுக்கு பாதிப்பு என்பது இதுவரை இல்லை அல்லது மிகமிகக் குறைந்த அளவில்தான் இருக்கிறது என்றும் அவர் செய்தியாளர்களிடத்தில் விளக்கம் அளித்தார். இயற்கையாக வைரஸ் தன் குணத்தை மாற்றிக் கொண்டால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற போதும் இரண்டு அல்லது மூன்று சதவீத குழந்தைகளுக்குத்தான் மருத்துவமனை சிகிச்சை அவசியமாக இருக்கும் என்று வி.கே.பால் தெரிவித்தார். 

நாட்டின் நான்காவது தடுப்பூசி வரும் ஆகஸ்டில் பயன்பாட்டுக்கு வரும்-நிதி ஆயோக்

நாட்டின் நான்காவது தடுப்பூசி வரும் ஆகஸ்டில் பயன்பாட்டுக்கு வரும்-நிதி ஆயோக்

Apr 22, 2021

3155

நாட்டின் நான்காவது கொரோனா தடுப்பூசி வரும் ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது என நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் பால் தெரிவித்துள்ளார்.ஐதராபாத்தில் உள்ள பயாலஜிகல்-இ நிறுவனத்தின் இந்த தடுப்பூசியின் முதல் இரண்டு கட்ட சோதனைகள் முடிந்து அதன் தரவுகள் மத்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் விரைவில் தாக்கல் செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறையுடன் சேர்ந்து உருவாக்கப்படும் இந்த தடுப்பூசியின் 3 ஆம் கட்ட சோதனைகள் உடனடியாக துவங்கும் என்றும் அவர் கூறினார். ஏற்னவே கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் மத்திய அரசு அண்மையில் அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதலை வழங்கியது.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் மக்கள் மெத்தனமாக இருக்க வேண்டாம்:  நிதி ஆயோக்

கொரோனா வைரஸ் விவகாரத்தில் மக்கள் மெத்தனமாக இருக்க வேண்டாம்: நிதி ஆயோக்

Mar 12, 2021

2465

கொரோனா வைரஸ் விவகாரத்தில் மக்கள் மெத்தனமாக இருக்க வேண்டாம் என நிதி ஆயோக் அறிவுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக டெல்லியில் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது மத்திய அரசுக்கு கவலையளிக்கிறது என்றார். இது நமக்கு இரண்டு பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளதாக கூறிய அவர், ஒன்று கொரோனா வைரஸ் விஷயத்தில் மெத்தனம் கூடாது;இன்னொன்று கொரோனா இல்லா இந்தியாவை உருவாக்க முகக்கவசம் சமூக இடைவெளி உள்ளிட்ட நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றார்.

கொரோனா தடுப்பூசி இயக்கத்தில் தனியார் பங்களிப்பை அதிகரிப்பது குறித்து ஒருசில நாட்களில் அறிவிப்பு வெளியாகும் -நிதி ஆயோக்

கொரோனா தடுப்பூசி இயக்கத்தில் தனியார் பங்களிப்பை அதிகரிப்பது குறித்து ஒருசில நாட்களில் அறிவிப்பு வெளியாகும் -நிதி ஆயோக்

Feb 22, 2021

1078

கொரோனா தடுப்பூசி இயக்கத்தில் தனியார் பங்களிப்பை அதிகப்படுத்துவது குறித்த அறிவிப்பு ஒருசில நாட்களில் வெளியாகும் என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றுச் சமாளிப்புக் குழுவின் தலைவரான வி.கே.பால் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இதுவரை ஒருகோடியே 7 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.ஒரு நாளில் பத்தாயிரம் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றால் அவற்றில் இரண்டாயிரம் முகாம்கள் தனியார் துறையினரால் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.கொரோனா தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்தும் வகையில் தனியார் பங்களிப்பை அதிகப்படுத்த முடிவெடுத்துள்ளதாகவும், அது குறித்த அறிவிப்பு ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் வி.கே.பால் குறிப்பிட்டார். 

BIG STORIES

காதலன் மீது கொலை வெறி.. செல்போன் நிறுவன பெண் ஊழியர் செய்த கொடூர செயல்..! 23 வயது எப்படி 16 ஆனது ?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News